விபத்தில் காயமடைந்த மற்றுமொரு முல்லைத்தீவு இளைஞனும் உயிரிழப்பு

விபத்தில் காயமடைந்த மற்றுமொரு முல்லைத்தீவு இளைஞனும் உயிரிழப்பு

குருணாகல் – அனுராதபுரம் பிரதான வீதியின் தலாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில்ஆடைத் தொழிற்சாலை வேன் ஒன்றும், லொறியொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகிய சம்பவம் ஒன்று கடந்த 25.09.2025 அன்று இடம்பெற்றிருந்தது.

இந்த விபத்தில் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு, செம்மலை பகுதிகளை சேர்ந்த (புதுக்குடியிருப்பு தனியார் ஆடைத்தொழில்சாலை) ஊழியர்கள் நான்கு பேர் உயிரிழந்திருந்தனர்.

குறித்த விபத்தில் காயமடைந்து அனுரபுரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பினை சேர்ந்த இளைஞன் 29.09.2025 நேற்றையதினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவத்தில் ஒன்பதாம் வட்டாரம் மல்லிகைத்தீவு புதுக்குடியிருப்பினை சேர்ந்த நடராசா விஸ்னுயன் என்ற (வயது-21) இளைஞனே உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தினை சேர்ந்த ஐந்து இளைஞர்கள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடதக்கது.

Share This