பாகிஸ்தானின் 25  இராணுவ முகாம்களைக் கைப்பற்றிவிட்டதாக ஆப்கானிஸ்தான் அறிவிப்பு

பாகிஸ்தானின் 25  இராணுவ முகாம்களைக் கைப்பற்றிவிட்டதாக ஆப்கானிஸ்தான் அறிவிப்பு

பாகிஸ்தானின் 25  இராணுவ முகாம்களைக் கைப்பற்றிவிட்டதாக ஆப்கானிஸ்தான் அறிவித்துள்ளது.

அத்துடன் 58 வீரர்களை கொலை செய்ததாகவும்  30 பாகிஸ்தான் வீரர்கள் காயமடைந்ததாகவும் தலிபான் செய்தித் தொடர்பாளர் சபிஹுல்லா முஜாஹித் தெரிவித்துள்ளார்.

அண்மையில் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் வான்வழித் தாக்குதல் இடம்பெற்றது.
இதற்கு பாகிஸ்தான் தான் காரணம் என குற்றம் சுமத்திய தலிபான் பதிலடியாக பாகிஸ்தான் இராணுவ முகாம்கள் மீது தாக்குதல் நடத்தின.

இந்நிலையிர் நேற்று இரவு பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையில் நடந்த இந்த தாக்குதலின்போது இரு தரப்புப் படைகளுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆப்கானிஸ்தானின் இறையாண்மையைப் பாதுகாக்க இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறிய தலிபான் செய்தித் தொடர்பாளர் சபிஹுல்லா முஜாஹித் எதிர்த்தரப்பு மீண்டும் ஆப்கானிஸ்தானின் வான்வெளியை மீறினால் வலுவான பதிலடி கொடுப்போம் என பாகிஸ்தானை எச்சரித்தார்.

குனார் மற்றும் ஹெல்மண்ட் மாகாணங்கள் உட்பட டூராண்ட் கோடு நெடுகிலும் பல இடங்களில் மோதல்கள் நடந்ததை பாகிஸ்தான் பாதுகாப்பு அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். ஆனால், தலிபான் தங்கள் முகாம்களை கைப்பற்றியதாகக் கூறும் கூற்றுக்களை அவர்கள் நிராகரித்தனர்.

Share This