இஷாரா செவ்வந்தி உட்பட கைதான ஐவரை இன்று நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை

இஷாரா செவ்வந்தி உட்பட கைதான ஐவரை இன்று நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் முக்கிய சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி உட்பட ஐந்து இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்காக விசேட அதிரடிப் படையின் இரண்டு அதிகாரிகள் நேபாளத்திற்கு சென்றுள்ளனர்.

நேபாளத்தில் உள்ள குற்றப்புலனாய்வுத் திணைக்கள (CID) குழுவிற்கு உதவுவதற்காக இவர்கள் நேபாளத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இன்று (15) மாலை நாட்டிற்கு அழைத்து வரப்படுவார்கள் என தெரிவிக்கப்படுகிறது.

நேபாளத்தின் காத்மாண்டுவில் இருந்து சுமார் 18 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள ஒரு வீட்டில் தங்கியிருந்தபோது, நேபாள பாதுகாப்புப் படையினருடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் இஷாரா செவ்வந்தி கைது செய்யப்பட்டார்.

இஷாரா செவ்வந்தியுடன் மற்றொரு பெண் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களில் தற்போது பொலிஸ் காவலில் உள்ள கெஹெல்பத்தர பத்மேவின் நெருங்கிய நண்பர் ஒருவரும் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான சஞ்சீவ குமார சமரரத்ன, அல்லது ‘கணேமுல்ல சஞ்சீவ’, கடந்த பெப்ரவரி 19 அன்று புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

இந்தக் கொலை கெஹெல்பத்தர பத்மேவின் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )