சிலாபம் – கொழும்பு வீதியில் விபத்து – கான்ஸ்டபள் ஒருவர் பலி

சிலாபம் – கொழும்பு வீதியில் விபத்து – கான்ஸ்டபள் ஒருவர் பலி

சிலாபம் – கொழும்பு வீதியில் கார் ஒன்று மோதியதில் போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த கான்ஸ்டபள் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மாரவில ஆதார வைத்தியசாலைக்கு அண்மையில் இன்று காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த மற்றுமொரு பொலிஸ் கான்ஸ்டபள் மாரவில ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்த பொலிசார் சிலாபம் பொலிஸ் போக்குவரத்து பிரிவில் கடமையாற்றியவர் என தெரியவந்துள்ளது.

இதேவேளை, மோட்டார் வாகனத்தை செலுத்திய 22 வயதான பல்கலைக்கழக மாணவன் மற்றும் அதில் பயணித்த அவரின் தாய் மற்றும் பாட்டி காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

Share This