மேலும் மூன்று இஸ்ரேலிய பணயக்கைதிகளை ஹமாஸ் விடுவிக்கும் என எதிர்பார்ப்பு
![மேலும் மூன்று இஸ்ரேலிய பணயக்கைதிகளை ஹமாஸ் விடுவிக்கும் என எதிர்பார்ப்பு மேலும் மூன்று இஸ்ரேலிய பணயக்கைதிகளை ஹமாஸ் விடுவிக்கும் என எதிர்பார்ப்பு](https://oruvan.com/wp-content/uploads/2025/02/hamas.jpg)
இஸ்ரேலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பலஸ்தீன கைதிகளை விடுவிப்பதற்கு பதிலாக, இன்று மேலும் மூன்று இஸ்ரேலிய பணயக்கைதிகளை ஹமாஸ் விடுவிக்கும்
என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜனவரி 19 அன்று ஆரம்பமான இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக எலி ஷராபி, ஓஹத் பென் அமி மற்றும் ஓர் லெவி ஆகியோரின் விடுதலை எதிர்பார்க்கப்படுகிறது.
ஒப்பந்தத்தின் முதற்கட்டமாக, 33 இஸ்ரேலிய பணயக்கைதிகள் விடுவிக்கப்பட உள்ளனர்.
கடந்த வாரம், இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே பணயக்கைதிகள் மற்றும் கைதிகளின் அண்மைய பரிமாற்றத்தில் மூன்று பணயக்கைதிகள் மற்றும் 183 இற்கும் மேற்பட்ட பலஸ்தீன கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.