‘கில்லியன் பேர் சிண்ட்ரோம்’ நோய் – ஒருவர் உயிரிழப்பு
மகாராஷ்ட்ரா மாநிலம் புனேவில் கடந்த சில நாட்களாக கில்லியன் பேர் சிண்ட்ரோம் எனும் நோயினால் சுமார் 70 இற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.
தசைகளை இயக்கும் நரம்புகளில் பாதிப்பை ஏற்படுத்தி கை,கால் தசைகளை வலுவடையச் செய்யும் இந்த நோய் நிலைமை தற்போது அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்ட இந்த 70 பேரில் 14 பேர் வெண்டிலேட்டர் உதவியுடன் செயற்கை சுவாசம் மூலம் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் புனேயில் மேலும் சிலருக்கு இந்த பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 101 ஆக அதிகரித்துள்ளது.
இவ்வாறிருக்க சோளாப்பூரில் இந்த நோய் அறிகுறியோடு சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.