செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் இன்று ஆரம்பம்

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் இன்று ஆரம்பம்

யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள், சுமார் எட்டு மாத கால இடைவெளிக்குப் பின்னர் யாழ் நீதவான் எஸ். லெனின்குமார் முன்னிலையில் இன்றைய தினம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே முன்னெடுக்கப்பட்ட இரண்டு கட்ட அகழ்வுப் பணிகளின் போது, 240 மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் அடையாளம் காணப்பட்டதுடன், அவற்றில் 239 எச்சங்கள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

பருவமழை மற்றும் காலநிலை சீரின்மை காரணமாக இரண்டாம் கட்டப் பணிகள் கடந்த செப்டெம்பர் மாதத்துடன் நிறைவடைந்தன.

புதைகுழிக்குள் மழை வெள்ளம் தேங்கியதால் நிலவிய தடைகளைத் தாண்டி தற்போது அடுத்தகட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

அப்பகுதியில் மேலும் எலும்புக்கூடுகள் காணப்படுவதால் அகழ்வுப் பணிகளைத் தொடர 8 வார கால அவகாசம் கோரி சட்ட வைத்திய அதிகாரி முன்வைத்த விண்ணப்பத்திற்கு அமைய நீதிமன்றம் இந்த அனுமதியை வழங்கியுள்ளது.

இந்த மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளுக்காக நிதி அமைச்சினால் 2 கோடியே 10 இலட்சம் ரூபா நிதி விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )