வெள்ளை மாளிகையில் பலமுறை துப்பாக்கிச் சூடு  – அவசரமாக வெளியேற்றப்பட்ட ட்ரம்ப்

வெள்ளை மாளிகையில் பலமுறை துப்பாக்கிச் சூடு – அவசரமாக வெளியேற்றப்பட்ட ட்ரம்ப்

வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) பங்கேற்ற பாரம்பரிய பத்திரிகையாளர் இரவு விருந்தில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் இலங்கை நேரப்படி இன்று காலை 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

நிகழ்வின் போது, திடீரென துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன

இதேவேளை, மேடையில் இருந்த ட்ரம்ப் மற்றும் மெலானியா டிரம்ப் ஆகியோரை இரகசிய சேவைப் பிரிவு அதிகாரிகள் உடனடியாகப் பாதுகாப்பாக வெளியேற்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தில் ட்ரம்ப் மற்றும் மெலானியாவிற்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்பதும், அவர்கள் நலமாக இருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஹோட்டல் வளாகத்திற்குள் நான்கு முதல் ஆறு முறை பலத்த வெடிப்புச் சத்தம் கேட்டதாக அங்கிருந்த ஒரு புகைப்படக்கலைஞர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்தச் சத்தம் விருந்து நடைபெற்ற பிரதான அரங்கிற்குள் கேட்கவில்லை என்றாலும், துப்பாக்கி ஏந்திய நபர் ஒருவர் ஊடுருவி இருப்பதாக வெளியான ஆரம்பகட்ட தகவல்களால் அங்கிருந்த விருந்தினர்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்ததாக கூறப்படுகின்றது.விருந்தில் பங்கேற்ற சுமார் 2,600 பேர் கீழே குனியுங்கள் என்ற எச்சரிக்கை கூச்சலைக் கேட்டதும், அச்சத்தில் அங்கிருந்த மேசைகளின் கீழ் மறைந்துள்ளனர்.

இதேவேளை, ட்ரம்ப் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்த இரகசிய சேவை அதிகாரிகள், முழுமையான பாதுகாப்பு கவசங்களுடன் அந்த இடத்திற்கு பலத்த பாதுகாப்பு வழங்கியுள்ளனர்.இந்நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக ட்ரம்ப் தனது ட்ரூத் சமூகவலைதள பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.

அவர் தனது பதிவில், “பாதுகாப்பு அதிகாரிகள் சிறப்பாக செயல்பட்டனர்” என பாராட்டியுள்ளார்.

இதேவேளை துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படும் சந்தேக நபரின் புகைப் படத்தையும் ட்ரம்ப் பகிர்ந்துள்ளார்.

சந்தேக நபர், கலிபோர்னியாவின் டொரன்ஸைச் சேர்ந்த 31 வயதான கோல் தாமஸ் ஆலன் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )