கடன் சுமையை குறைக்கும் கிரீஸ்

கடன் சுமையை குறைக்கும் கிரீஸ்

ஐரோப்பிய மண்டல பொருளாதாரத்தில் கிரீஸ் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளின் பொதுக் கடன் நிலைமையில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

கிரீஸின் பொதுக் கடன் கடந்த ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 145 சதவீதமாக இருந்த நிலையில், இந்த ஆண்டு அது சுமார் 137 சதவீதமாக குறையும் என கணிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் கிரீஸ் தனது கடன் சுமையை மெதுவாக குறைத்து பொருளாதார நிலையை மேம்படுத்தி வருவதாக மதிப்பிடப்படப்பட்டுள்ளது. இதற்கு மாறாக, இத்தாலியின் கடன் நிலை உயர்வை நோக்கி செல்கிறது. 2025-ல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 137.1 சதவீதமாக இருந்த இத்தாலியின் பொதுக் கடன், 2026-ல் சுமார் 138.6 சதவீதமாக உயரும் என புதிய வரவுசெலவுத் திட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஐரோப்பிய மண்டலத்தில் அதிகக் கடன் சுமை கொண்ட நாடுகளின் வரிசையில் மாற்றம் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )