
பேச்சுவார்த்தை தொடரும், போர் நிறுத்தம் நடைமுறையில் இருக்கும் – அமெரிக்கா அறிவிப்பு
ஈரானுடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும், போர் நிறுத்தம் நடைமுறையில் இருப்பதாகவும் அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் தெரிவித்துள்ளார்.
ஈரானியப் பேச்சுவார்த்தையாளர்கள் உடன்பாடு ஒன்றை விரும்புவதாக, ஜோர்ஜியா பல்கலைக்கழகத்தில் ஆற்றிய உரையில் ஜே.டி. வான்ஸ் உறுதிப்படுத்தினார்.
இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே மிகுந்த அவநம்பிக்கை நிலவுகிறது என்றும், அதை ஒரே இரவில் சரிசெய்துவிட முடியாது என்றும் கூறினார்.
இந்நிலையில், ஈரானுடன் ஒரு விரிவான உடன்பாட்டை எட்ட விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஈரான் இயல்பு நிலைக்குத் திரும்பினால், அமெரிக்காவும் பொருளாதார ரீதியாக ஒரு இயல்பான நாட்டைப் போல செயல்படும் என்று அவர் கூறியுள்ளார்.
இதுபோன்ற உயர்மட்ட அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தைகள் கடந்த 49 ஆண்டுகளில் நடைபெறவில்லை என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஈரான் அணு ஆயுதங்களைப் பெறாமலும், அரசு பயங்கரவாதத்தில் ஈடுபடாமலும் இருக்கும் வகையில் இந்த ஒப்பந்தம் அமைய வேண்டும்.
ஈரானிய மக்கள் உலகப் பொருளாதாரத்தின் ஓர் அங்கமாக மாறும் வகையில் அந்த ஒப்பந்தம் அமைய வேண்டும் என ஜே.டி. வான்ஸ் கூறினார்.
டிரம்ப், ஈரானை விடச் சிறியதான ஒரு ஒப்பந்தத்தை அல்ல, ஒரு விரிவான ஒப்பந்தத்தையே விரும்புகிறார். ஈரான் ஒப்பந்தம் அமெரிக்காவிற்கும் உலகில் உள்ள அனைவருக்கும் சிறந்ததாக இருக்க வேண்டும் என டிரம்ப் விரும்புகிறார்.
டிரம்ப் தன்னை நல்லெண்ணத்தின் அடிப்படையில் அனுப்பினார் என்பதும், டிரம்ப் சிறிய ஒப்பந்தத்தை விரும்பவில்லை என்பதும் ஈரானியர்களுக்குத் தெரியும்.
அதனால்தான் ஈரானுடன் இதுவரை எந்த ஒப்பந்தமும் செய்யப்படவில்லை என்றும் ஜே.டி. வான்ஸ் கூறியுள்ளார்.
பாகிஸ்தானில் ஏராளமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று நான் கூறினேன், ஆனால் ஒரு விரிவான உடன்பாடு எட்டப்படவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
