
டி20 போட்டிகளில் ஒன்பது விட்கெட்டுகளை வீழ்த்தி பிரேசில் வீராங்கனை உலக சாதனை
கால்பந்தில் வரலாறு படைத்த பிரேசில், சர்வதேச கிரிக்கெட்டிலும் ஒரு புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது.
பிரேசில் மகளிர் அணியின் வீராங்கனை லாரா கார்டோசோ, சர்வதேச இருபதுக்கு இருபது போட்டி ஒன்றில் ஒரே இன்னிங்ஸில் ஒன்பது விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பந்து வீச்சாளர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
இதுவரை ஆடவர் அல்லது மகளீர் பங்குபற்றி சர்வதேச இருபதுக்கு இருபது போட்டிகளில் இதுவரை யாரும் ஒன்பது விக்கெட்டுகளை வீழ்த்தியதில்லை.
லெசோதோ அணிக்கு எதிரான போட்டியில் மூன்று ஓவர்களில், இரண்டு மெய்டன் ஓவர்கள் உட்பட வெறும் நான்கு ஓட்டங்களை மட்டுமே விட்டுக்கொடுத்து ஒன்பது விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
21 வயதான லாரா கார்டோசோ, முதல் ஓவரிலேயே ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தினார். இரண்டாவது ஓவரில் நான்கு விக்கெட்டுகளையும், மூன்றாவது ஓவரில் இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.
முதலில் துடுப்பெடுத்தாடியிருந்த பிரேசில் அணி, 203 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
இருப்பினும், லெசோதோ அணி 6.2 ஓவர்களில் வெறும் 13 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் பிரேசில் அணி 189 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முன்னதாக பூட்டானிய வீரர் சோனம் யேஷே 2025ஆம் ஆண்டு எட்டு விக்கெட்டுகளை வீழ்த்தியமையே சாதனையாக இருந்திருந்தமை குறிப்பிடத்கதக்து.
