லாஃப்ஸ் சமையல் எரிவாயு இன்று முதல் தடையின்றி வழங்கப்படும்

லாஃப்ஸ் சமையல் எரிவாயு இன்று முதல் தடையின்றி வழங்கப்படும்

பண்டிகைக் காலத்தில் நுகர்வோருக்கு தட்டுப்பாடின்றி லாஃப்ஸ் எரிவாயுவை வழங்கும் நடவடிக்கைகள் இன்று முதல் முன்னெடுக்ப்படவுள்ளன.

வர்த்தக அமைச்சரின் விசேட அறிவுறுத்தலுக்கு அமைய, இதற்கான சட்ட நடைமுறைகள் குறித்து லாஃப்ஸ் நிறுவனத்திற்குத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

ஏழாயிரம் மெற்றிக் தொன் எரிவாயுவை ஏற்றிய கப்பல் கடந்த ஆறாம் திகதி ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்த நிலையில்,அந்த கையிருப்பினை இன்று முதல் சந்தைக்கு விநியோகிக்க லாஃப்ஸ் நிறுவனம் இணக்கம் தெரிவித்துள்ளதாக அந்த சபையின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, பண்டிகைக் காலத்தை முன்னிட்டு நுகர்வோரை பாதுகாக்கும் வகையில் நாடு தழுவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்புகள் மற்றும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சட்டவிரோத வர்த்தக நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் வகையில் இந்த விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் பணிப்பாளர் அசேல பண்டார தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )