சவூதி அரேபியாவின் பெட்ரோ கெமிக்கல் ஆலைகள் மீது தாக்குதல்

சவூதி அரேபியாவின் பெட்ரோ கெமிக்கல் ஆலைகள் மீது தாக்குதல்

சவூதி அரேபியாவின் ஜுபைல் பகுதியில் உள்ள பெட்ரோ கெமிக்கல் ஆலைகள் மீதான தாக்குதல்களுக்குப் ஈரானின் ஐ.ஆர்.ஜி.சி பொறுப்பேற்றுள்ளது.

ஷிராஸ் பெட்ரோ கெமிக்கல் ஆலை மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாகவே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக ஐ.ஆர்.ஜி.சி தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ஜுபைலில் உள்ள சத்ரா, எக்ஸான்மொபில் மற்றும் டார்க் கெமிக்கல் உள்ளிட்ட அமெரிக்க நிறுவனங்களை ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் குறிவைத்ததாக ஐ.ஆர்.ஜி.சி. தெரிவித்துள்ளது.

ஜுவைமாவில் உள்ள, அமெரிக்க நிறுவனமான பெட்ரோ கெமிக்கல் வளாகத்தை, நடுத்தர தூர ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் குறிவைத்ததாகவும் ஐ.ஆர்.ஜி.சி தெரிவித்துள்ளது.

ஹார்முஸ் நீரிணையை மீள திறக்க வேண்டும் எனவும் அவ்வாறு இல்லாவிட்டால் தாக்குதல்கள் தீவிரமடைய நேரிடும் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் காலக்கெடு விதித்திருந்தார்.

எவ்வாறாயினும், மின் நிலையங்கள் மற்றும் பாலங்கள் மீதான எந்தவொரு தாக்குதலுக்கும் பதிலடி கொடுக்கப்படும் என ஈரானும் எச்சரிக்கை விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )