ஷமிந்திர ராஜபக்சவிற்கு திறந்த பிடியாணை

ஷமிந்திர ராஜபக்சவிற்கு திறந்த பிடியாணை

முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்சவின் மகன் ஷமிந்திர ராஜபக்ச உள்ளிட்டவர்களுக்கு திறந்த பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஏர்பஸ் விமானங்களைக் கொள்முதல் செய்தது தொடர்பான கையூட்டுச் சம்பவம் ஒன்றில் சந்தேக நபர்களாகப் பெயரிடப்பட்டுள்ள ஷமிந்திர ராஜபக்ஷ மற்றும் கபில சந்திரசேனவின் மனைவி பிரியங்கா நியோமாலி விஜேநாயக்க ஆகியோரைக் கைது செய்வதற்கான பிடியாணை உத்தரவுகளை கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம இன்று பிறப்பித்தார்.

இலங்கையில் உள்ள அனைத்து விமான நிலையங்களுக்கும் இந்த உத்தரவை அறிவிக்குமானு நீதிபதி மேலும் உத்தரவிட்டார்.

மேலும், சந்தேக நபர்கள் நாட்டிற்குள் வந்தவுடன் அவர்களைக் கைது செய்யவும், இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவிற்குத் தகவல் தெரிவிக்கவும் குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு அறிவுறுத்தப்பட்டது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )