அமெரிக்காவுடன் நேரடிப் பேச்சுவார்த்தை இல்லை – ஈரான் மறுப்பு

அமெரிக்காவுடன் நேரடிப் பேச்சுவார்த்தை இல்லை – ஈரான் மறுப்பு

அமெரிக்காவுடன் நேரடிப் பேச்சுவார்த்தை நடத்துவதை ஈரான் மறுத்துள்ளது.

அமெரிக்காவுடன் நேரடிப் பேச்சுவார்த்தைகள் எதுவும் நடைபெறவில்லை என்றும், இடைத்தரகர்கள் மூலமாகவே தகவல்கள் பகிர்ந்துக்கொள்ளப்பட்டதாகவும் ஈரான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாய் தெரிவித்தார்.

ஈரானுக்கு அனுப்பப்பட்ட முன்மொழிவுகள் பெரும்பாலும் யவரம்பு மீறியவை என்று கூறிய அவர், பிராந்திய நாடுகள் அமைதிக்கு முயற்சிப்பது வரவேற்கத்தக்கது என்றும் தெரிவித்துள்ளார்.

எனவே, நிலைமையை யதார்த்தமாகப் பார்ப்பது முக்கியம் என்று இஸ்மாயில் பகாய் சுட்டிக்காட்டியுள்ளார்.

உக்ரைன் மோதலை, ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேலியப் போருடன் தொடர்புபடுத்துவது பேரழிவு தரும் தவறான புரிதல் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, ஈரான் தனது அணுசக்தி லட்சியங்களைக் கைவிடாவிட்டால், எதிர்காலத்தில் தன் நாட்டை இழக்க நேரிடலாம் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )