தேர்தல் காரணமாக சென்னையில் சிஎஸ்கே விளையாடும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை வேறு திகதிக்கு மாற்றக்கோரி வழக்கு

தேர்தல் காரணமாக சென்னையில் சிஎஸ்கே விளையாடும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை வேறு திகதிக்கு மாற்றக்கோரி வழக்கு

சட்​டசபைத் தேர்​தலை முன்​னிட்டு சென்​னை​யில் சூப்​பர் கிங்ஸ் அணி​ பங்​கேற்​கும் இரு ஐபிஎல் கிரிக்​கெட் போட்​டிகளை​யும் வேறு திகதி​களுக்கு மாற்​றக்​கோரி, வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சேப்​பாக்​கம் – திரு​வல்​லிக்​கேணி தொகுதி வாக்​காளர் டி.பிர​பாகரன் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தாக்கல் செய்​துள்ளார்.

அவர் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது,

“தமிழகத்​தில் சட்​டசபைத் தேர்​தல் எதிர்வரும் ஏப்​ரல் 23 ஆம் திகதி அன்று நடை​பெறவுள்​ளது. தேர்​தலுக்​கான வேட்​புமனு தாக்​கல் மார்ச் 30 ஆம் திகதி தொடங்​கு​கிறது.

இந்​நிலை​யில் ஏப்ரல் 4 மற்​றும் ஏப்​ரல் 11 ஆம் திகதி​களில் சேப்​பாக்​கம் மைதானத்​தில் சென்னை சூப்​பர் கிங்ஸ் அணி பங்​கேற்​கும் கிரிக்​கெட் போட்​டிகள் நடை​பெறவுள்​ளது.

தேர்​தல் நேரத்​தில் சேப்​பாக்​கம் மைதானத்​தில் நடை​பெறவுள்ள போட்​டிகளை வேறு திபதிக்கு மாற்ற உத்​தர​விட வேண்​டும்.

சென்னை சூப்​பர் கிங்ஸ் அணி பங்​கேற்​கும் போட்​டிகளை தேர்​தல் முடிந்த பிறகு நடத்​திக் கொள்ள ஐபிஎல் நிர்​வாகத்​துக்கு அறி​வுறுத்த வேண்​டும்.

சேப்​பாக்​கத்​தில் கிரிக்​கெட் போட்டி நடத்​தப்​பட்​டால் கிரிக்​கெட் போட்​டியைக் காண வரும் இரசிகர்​களுக்​கும், கிரிக்​கெட் வீரர்​களுக்​கும் பாது​காப்பை உறுதி செய்ய வேண்​டிய கட்​டா​யம் பொலிஸாருக்கு ஏற்​படும்.

ஐபிஎல் போட்​டிகளின் போது கிரிக்​கெட் இரசிகர்​கள் என்ற போர்​வை​யில் மைதானத்​துக்​குள் தங்​களது சின்​னத்​துடன் கட்சியினர் பிர​ச்சா​ரம் செய்​வர் என்​ப​தால் தேவையற்ற சட்​டம் – ஒழுங்கு பிரச்​சினை ஏற்​படும்.

எனவே, ஏப்ரல் 04 மற்​றும் ஏப்​ரல் 11 ஆம் திகதி​களில் நடை​பெறவுள்ள கிரிக்​கெட் போட்​டிகளை தமிழகத்​தில் தேர்​தல் முடிந்த பிறகு நடத்​திக் கொள்​ளு​மாறு போட்டி ஏற்​பாட்​டாளர்​களை அறி​வுறுத்த தேர்​தல் ஆணை​யத்​துக்கு உத்​தர​விட வேண்​டும்.

ஒரு​வேளை கிரிக்​கெட் போட்​டிகளுக்​கான திகதி​களை மாற்ற முடி​யாது எனக் கூறி​னால் தேர்​தல் நடத்தை விதி​களை கடுமை​யாக அமுல்​படுத்​த​வும், அரசி​யல் கட்​சிகளின் சின்​னங்​கள், கொடிகள் என எதை​யும் மைதானத்​துக்​கு உள்​ளே​யும், வெளி​யே​யும் காட்​சிப்​படுத்த அனு​ம​திக்​கக் கூடாது என ஐபிஎல் நிர்​வாத்​துக்கு உத்​தர​விட வேண்​டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )