
ட்ரம்ப் – ஸ்டார்மர் இடையே ஹார்முஸ் நீரிணை குறித்து முக்கிய கலந்துரையாடல்
பிரித்தானிய பிரதமர் ஸ்டார்மர் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இடையே ஆக்கப்பூர்வமான கலந்துரையாடல் இடம்பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இரு தலைவர்களும் மத்திய கிழக்கின் தற்போதைய நிலைமை குறித்து விரிவாக தொலைபேசியில் உரையாடியதாக
டவுனிங் ஸ்டீரிட் அறிவித்துள்ளது.
குறிப்பாக, உலகளாவிய கப்பல் போக்குவரத்தை சீராக மீண்டும் முன்னெடுக்க ஹார்முஸ் நீரிணையை திறந்துவைப்பதன் அவசியம் குறித்து கவனம் செலுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், உலகளாவிய எரிசக்தி சந்தையில் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த ஹார்முஸ் நீரிணையின் செயல்பாடு மிக முக்கியம் என்பதை இருவரும் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.
எதிர்காலத்தில் இந்த விடயம் தொடர்பாக மீண்டும் கலந்துரையாடவும் அவர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
