ஈரானுடன் பேச்சுவார்த்தை வெற்றி – இந்தியா அறிவிப்பு

ஈரானுடன் பேச்சுவார்த்தை வெற்றி – இந்தியா அறிவிப்பு

ஹர்முஸ் நீரிணையை வழியாக இந்திய கப்பல்களை அனுமதிப்பது தொடர்பிலான ஈரானுடனான பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முன்னேற்றம் கண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர்  இதனை தெரிவித்துள்ளார்.

ஈரானுடனான பேச்சுவார்த்தைகள் ஏற்கனவே சில சாதகமான முடிவுகளைத் தந்துள்ளதாக ஃபைனான்சியல் டைம்ஸூக்கு அளித்த செவ்வியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், அனைத்து இந்தியக் கப்பல்களுக்கும் இன்னும் பொதுவான அனுமதி வழங்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒவ்வொரு கப்பலையும் தனித்தனியாகப் பரிசீலித்து நடத்தப்படும் கலந்துரையாடல்களின் அடிப்படையில் அனுமதி வழங்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றமாக, இந்தியக் கொடியுடன் கூடிய இரண்டு எரிவாயு கப்பல்கள் கடந்த சனிக்கிழமை ஹார்முஸ் நீரிணை வழியாக பயணத்தை மேற்கொண்டிருந்தன.

மேலும் 22 இந்தியக் கப்பல்கள் அனுமதிக்காகக் காத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவைகளில் சுமார் 40 தொடக்கம் 50 சதவீதம் ஹர்முஸ் நீரிணையை வழியாகவே முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )