
எரிவாயு தட்டுப்பாடு – மக்களுக்கு விரைவான சேவையை வழங்க இந்திய நிறுவனங்கள் நடவடிக்கை
இந்தியாவில் சமையல் எரிவாயுவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் மக்கள் அச்சமடையே வேண்டாம் என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
மத்திய கிழக்கு நாடுகளில் இடம்பெறும் போர் பதற்றம் காரணமாக, இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக வணிகப் பயன்பாட்டுக்கான எரிவாயு விநியோகம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதால்
பல இடங்களில் உணவகங்கள் மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில் எல்பிஜி சமையல் எரிவாயு விநியோகம் மற்றும் சேவைகள் தொடர்ந்து இடம்பெறும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
விரைவான முன்பதிவுகளுக்கும், முறைப்பாடுகளுக்கு தீர்வு காணவும் வாடிக்கையாளர் அழைப்பு மையம் மேம்படுத்தப்பட்டுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அச்சம் கொள்வதைத் தவிர்க்குமாறு ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனமும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
