
எண்ணெய் விலையில் திடீர் வீழ்ச்சி
உலக சந்தையில் கடந்த சில நாட்களாக அதிகரிப்பை பதிவு செய்த மசகு எண்ணெய் விலை தற்போது குறைவடைந்துள்ளது.
இதன்படி, பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாயொன்றின் விலை இன்று காலை சுமார் 87.88 அமெரிக்க டொலர்களாக பதிவானதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்துடன் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாயொன்றின் விலை சுமார் 83.35 டொலர்களாக பதிவாகியுள்ளது.
2022 ஜூலைக்குப் பிறகு முதன்முறையாக திங்கட்கிழமை பீப்பாயொன்றின் மசகு எண்ணெயின் விலை 100 அமெரிக்க டொலர்களைத் தாண்டியது, மேலும் அதிகபட்ச விலை 119 அமெரிக்க டொலர்களாகப் பதிவானது.
மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் போர் பதற்றம் காரணமாகவே மசகு எண்ணெய் விலை இவ்வாறு அதிகரிப்பை பதிவு செய்தது.
இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் போர் விரைவில் நிறைவடையும் என அறிவித்ததையடுத்து மசகு எண்ணெய் விலை சற்று வீழ்ச்சியை பதிவு செய்தது.
