கொழும்பில் இருந்து போதைப்பொருட்களை கடத்தி வந்து யாழில் வியாபாரம் – பெண் உள்ளிட்ட இருவர் கைது

கொழும்பில் இருந்து போதைப்பொருட்களை கடத்தி வந்து யாழில் வியாபாரம் – பெண் உள்ளிட்ட இருவர் கைது

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு போதைப்பொருட்களை கடத்தி வந்து விற்பனையில் ஈடுபட்டு வந்த ஆணும் பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரிடம் இருந்தும் 630 போதை மாத்திரைகளும் 5 கிராம் 400 மில்லி கிராம் ஹெரோயினும் மீட்கப்பட்டுள்ளன.

போதைப்பொருள் விற்பனையில் ஆண் , பெண் ஈடுபடுவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இருவரையும் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரின் உடைமையில் இருந்து போதைப்பொருட்களை மீட்ட நிலையில், அவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில், கொழும்பில் உள்ள போதைப்பொருள் வியாபாரியிடம் இருந்து போதைப்பொருட்களை வாங்கி வந்து யாழ்ப்பாணத்தில் விற்பனை செய்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )