
இங்கிலாந்தின் ‘மிகவும் ஆபத்தான’ 10 பகுதிகள் பெயரிடப்பட்டுள்ளன.
இங்கிலாந்தின் ‘மிகவும் ஆபத்தான’ 10 பகுதிகள் பெயரிடப்பட்டுள்ளன.
நகர பாதுகாப்பு குறியீட்டின் சமீபத்திய குற்ற புள்ளிவிவரங்களுக்கு அமைய, அதிக குற்ற விகிதங்களைக் கொண்ட 10 பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதன்படி, “மிகவும் ஆபத்தான” பகுதி பட்டியலில் முதலிடத்தில் லண்டன் பெருநகரமான கேம்டன் ஆகும்.
இந்தப் பகுதி துன்புறுத்தல், சமூக விரோத நடத்தை மற்றும் வன்முறை சீர்குலைவு சம்பவங்களுக்குப் பெயர் பெற்றது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதற்கு அடுத்தப்படியாக, இஸ்லிங்டன் இடம்பெற்றுள்ளது. இங்கு கொள்ளை மற்றும் திருட்டுகள் குற்றங்கள் அதிகம் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்று மிகவும் ஆபத்தான இடங்களில் நாட்டிங்ஹாம் இடம் பெற்றுள்ளது.
மான்செஸ்டர் இங்கிலாந்தின் பத்தாவது ஆபத்தான நகரமாக மதிப்பிட்டுள்ளது.
ஒன்பதாவது இடத்தில் லெய்செஸ்டரும், நியூகேஸில் அபான் டைன் எட்டாவது இடத்திலும், மிடில்ஸ்பரோ ஏழாவது இடத்திலும் உள்ளன.
பிளாக்பூல் ஆறாவது ஆபத்தான நகரமாக பட்டியலிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
