ஈரானின் தாக்குதலால் அமெரிக்காவில் அதிக உயிரிழப்புகள் ஏற்படலாம் – ட்ரம்ப் எச்சரிக்கை

ஈரானின் தாக்குதலால் அமெரிக்காவில் அதிக உயிரிழப்புகள் ஏற்படலாம் – ட்ரம்ப் எச்சரிக்கை

ஈரான்–இஸ்ரேல் மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில் ஈரான் ஆதரவு பெற்ற ஹெஸ்பொல்லா அமைப்பு இஸ்ரேல் மீது தாக்குதல்கள் நடத்தியதையடுத்து, லெபனானில் உள்ள 50 இற்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்கும் மக்களை வெளியேறுமாறு இஸ்ரேல் பாதுகாப்புப் படை (IDF) அறிவுறுத்தியுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என்றும்
தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் மூன்று சேவை உறுப்பினர்கள் உயிரிழந்ததாகவும், ஐவர் தீவிர காயமடைந்ததாகவும் அமெரிக்க மத்திய கட்டளை தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு அமெரிக்க உயிரிழப்பும் உள்நாட்டில் அரசியல் அழுத்தத்தை அதிகரிக்கிறது என மூத்த நிருபர் பெர்ன்ட் டெபஸ்மேன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அமெரிக்க இராணுவ நடவடிக்கைகள் பல வாரங்கள் நீடிக்கலாம் என ட்ரம்ப் கூறியுள்ளதுடன், ஈரான் மீது தாக்குதல்களை மேலும் தீவிரப்படுத்த இஸ்ரேல் உறுதியளித்துள்ளது.

மேலும், சைப்ரஸில் உள்ள பிரித்தானிய ரோயல் விமானப்படை (RAF) தளம் ஞாயிற்றுக்கிழமை இரவு சந்தேகத்திற்குரிய
ட்ரோன் தாக்குதலால் இலக்கு வைக்கப்பட்டதாக பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த பதற்ற நிலை காரணமாக, திங்கட்கிழமை ஆசிய சந்தைகளில் உலகளாவிய எண்ணெய் விலைகள் உயர்ந்துள்ளன.

வளைகுடா பிராந்தியத்தில் வான்வெளி மூடப்பட்டதால், சர்வதேச விமானப் பயணங்களில் இடையூறுகள் தொடர்ந்து நிலவி வருகின்றமையும்  குறிப்பிடத்தக்கது.

 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )