எரிபொருளுக்கு தட்டுப்பாடு நிலவாது

எரிபொருளுக்கு தட்டுப்பாடு நிலவாது

மத்திய கிழக்கில் போர்ச் சூழல் நிலவியபோதிலும், தற்போது நாட்டில் 37 நாட்களுக்குப் போதுமான எரிபொருள் கையிருப்பு உள்ளதால் பொதுமக்கள் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டியதில்லை என இலங்கை எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இன்று ஞாயிற்றுக்கிழமை என்ற போதிலும் எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் இன்றும் தொடர்ச்சியாக இடம்பெறுவதோடு, நாளை பௌர்ணமி தினத்திலும் விநியோக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் டி.வி. சாந்த சில்வா  தெரிவித்துள்ளார்.

சாதாரணமாக இந்நிலைமை உருவாவதற்கு முன்னர், இன்று ஞாயிற்றுக்கிழமை ஒரு விடுமுறை தினமாகும். நீண்ட வார இறுதி விடுமுறை என்பதால், ஐஓசி நிறுவனம் ஏற்கனவே தீர்மானித்தபடி வழமை போலவே எரிபொருள் விநியோகத்தை முன்னெடுக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார் .

பொதுவாக பௌர்ணமி தினங்களில் எரிபொருள் போக்குவரத்து இடம்பெறுவதில்லை என்றாலும், முன்னரே தீர்மானித்தபடி நாளை எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படும் எனவும் இதற்காகத் தேவையான அளவு பௌசர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் தொடர்பாக எந்தவித தேவையற்ற அச்சமும் கொள்ள வேண்டியதில்லை எனவும் இலங்கை எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது .

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )