கியூபாவிற்கு எரிபொருள் வழங்க தயாராகும் ரஷ்யா!

கியூபாவிற்கு எரிபொருள் வழங்க தயாராகும் ரஷ்யா!

கியூபாவிற்கு எரிபொருள் வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து தமது அரசாங்கம் விவாதித்து வருவதாக ரஷ்யா துணைப் பிரதமர் அலெக்சாண்டர் நோவக் தெரிவித்துள்ளார்.

மெக்சிகோ, வெனிசுலா போன்ற நாடுகளுடன் சேர்ந்து, கியூபாவிற்கு எண்ணெய் வழங்கும் முன்னணி நாடுகளில் ரஷ்யாவும் ஒன்றாக இருந்து வந்துள்ளது.

எனினும், கடந்த மாதம் வெனிசுலா மீதான அமெரிக்க தாக்குதலைத் தொடர்ந்து கியூபாவின் எரிபொருள் விநியோகம் தடைபட்டது.

கடந்த ஜனவரி மூன்றாம் திகதி வெனிசுலா ஜனாதிபதி அமெரிக்க படைகளால் சிறைபிடிக்கப்பட்டார்.

இதனையடுத்து, கியூபாவிற்கு, வெனிசுலாவில் இருந்து எரிபொருள் ஏற்றுமதி செய்வதை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உடனடியான தடுத்து நிறுத்தினார்.

தொடந்து கியூபாவிற்கு எண்ணெய் ஏற்றுமதி செய்யும் எந்தவொரு நாட்டிற்கும் எதிராக பொருளாதாரத் தடைகளை விதிக்கும் நிர்வாக உத்தரவையும் பிறப்பித்தார்.

அமெரிக்காவின் நடவடிக்கையால் கியூபாவில் எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், மெக்சிகோ மற்றும் ரஷ்யா போன்ற நாடுகள் எரிபொருள் வழங்குவதற்கு பேச்சுவார்த்தை முன்னெடுத்துள்ளன.

இந்நிலையிலேயே, கியூபாவிற்கு எரிபொருள் வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து தமது அரசாங்கம் விவாதித்து வருவதாக ரஷ்யா துணைப் பிரதமர் அலெக்சாண்டர் நோவக் தெரிவித்துள்ளார்.

 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )