அக்குரேகொட துப்பாக்கிச் சூடு – மேலுமொரு துப்பாக்கிதாரி கைது

அக்குரேகொட துப்பாக்கிச் சூடு – மேலுமொரு துப்பாக்கிதாரி கைது

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவியைக் கொலை செய்ததாகக் கூறப்படும் மற்றொரு துப்பாக்கிதாரியும் கைது செய்யப்பட்டுள்ளார்.

மொனராகலை நக்கல பகுதியில் உள்ள வெறிச்சோடிய வீடு ஒன்றில் மறைந்திருந்தபோது, ​​அவரும் மேலும் மூன்று சந்தேக நபர்களும் மொனராகலை பொலிஸ் அதிகாரிகள் குழுவால் கைது செய்யப்பட்டனர்.

சந்தேக நபர் குறித்து மேலும் விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த கொலையில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களில் ஒருவர் முன்னர் கைது செய்யப்பட்டார்.

அந்த நோக்கத்திற்காக துப்பாக்கிகளை கொண்டு சென்ற இரண்டு பேரும், நடவடிக்கைகளை ஒருங்கிணைத்த ஒருவரும் சமீபத்தில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )