பிரித்தானிய துணை பிரதமர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் சந்திப்பு

பிரித்தானிய துணை பிரதமர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் சந்திப்பு

பிரித்தானிய துணை பிரதமர் டேவிட் லாம்மி மற்றும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கு இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பு கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.

பிரித்தானிய துணை பிரதமர் டேவிட் லாம்மி உள்ளிட்ட குழுவினர் நேற்று இலங்கைக்கு விஜயம் செய்திருந்தனர்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடன் பிரித்தானிய துணை பிரதமர் நேற்று சந்திப்பு நடத்தியிருந்தார்.

இந்நிலையில், எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவை இன்று சந்தித்துப் பேசியுள்ளார்.

இதன் போது இருவரும் ஜனநாயக நிர்வாகம், வர்த்தக விரிவாக்கம் மற்றும் இருதரப்பு மனிதாபிமான ஒத்துழைப்பு குறித்த விரிவான கலந்துரையாடல்களை மேற்கொண்டார்.

 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )