ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் வாகன விபத்து

ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் வாகன விபத்து

ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் காயமமைந்துள்ளார்.

கொட்டகலை, சென்கிளையர் பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

கொட்டகலைப் பகுதியிலிருந்து தலவாக்கலை நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டியொன்றும், தலவாக்கலையிலிருந்து கொட்டகலை
நோக்கி சென்ற மற்றுமொரு முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதியதில் விபத்து சம்பவித்துள்ளது.

இதன்போது பலத்த காயமடைந்த நபர் சிகிச்சைக்காக கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்தினால் இரண்டு முச்சக்கர வண்டிகளுக்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் தலவாக்கலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )