
எஸ்.ஜெய்சங்கர் – டில்வின் சில்வா இடையில் சந்திப்பு ; இலங்கைக்கு தொடர்ந்து உதவுவதாக இந்தியா உறுதி
இந்தியாவுக்கு உத்தியோகப்பூர்வ பயணம் மேற்கொண்டுள்ள மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா உள்ளிட்ட இலங்கைப் பிரதிநிதிகள் குழுவிற்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு புதுடில்லியில் இடம்பெற்றுள்ளது.
இந்தச் சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துதல், எதிர்கால வளர்ச்சி வாய்ப்புகளை ஆராய்தல் மற்றும் சமூக நலத்திட்டங்கள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டதாக தமது ‘X’ சமூக ஊடகத்தில் எஸ்.ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இலங்கைக்காக இந்தியா எப்போதும் ஒரு நம்பிக்கையான மற்றும் உண்மையான பங்காளியாகத் திகழும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இதன்போது டில்வின் சில்வாவிடம் உறுதியளித்துள்ளார்.

TAGS S. Jaishankar - Dilwin Silva meet; India assures continued assistance to Sri Lankaஎஸ்.ஜெய்சங்கர்டில்வின் சில்வா
