
பட்டதாரி ஆசிரியர் பணிக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன!
நாடளாவிய ரீதியில் திமிழ், சிங்களம் மற்றும் ஆங்கில மொழிமூலப் பாடசாலைகளில் வெற்றிடமாகவுள்ள இலங்கை ஆசிரியர் சேவைக்கு பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
வர்த்தமானி அறிவிப்பின்படி, தற்போது பொது சேவையில் பணியாற்றும் பட்டதாரிகள் பெப்ரவரி ஐந்தாம் திகதி காலை 9.00 மணி முதல் பெப்ரவரி 19ஆம் திகதி இரவு 9.00 மணி வரை ஒன்லைனில் விண்ணப்பிக்க முடியும்.
பொது சேவையில் இல்லாத பட்டதாரிகள் பெப்ரவரி 20 ஆம் திகதி காலை 9.00 மணி முதல் மார்ச் ஐந்தாம் திகதி காலை 9.00 மணி வரை விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம்.
விண்ணப்பங்களை பரீட்சைகள் திணைக்கள வலைத்தளமான www.doenets.lk இல் சமர்ப்பிக்க முடியும் என தெரிவிக்ககப்பட்டுள்ளது.
