• CONTACT US
Search

Oruvan.com

Oruwan News
  • முகப்பு
  • மின்னிதழ்
  • இலங்கை
  • உலகம்
  • இந்தியா
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • பொழுதுபோக்கு
  • ஜோதிடம்
Oruvan.com

மின் கட்டணத் திருத்தம் – பொதுமக்களின் வாய்மொழி கருத்து இன்று முதல்

December 27, 2024 12:07 pm
மின் கட்டணத் திருத்தம் – பொதுமக்களின் வாய்மொழி கருத்து இன்று முதல்

மின்சாரக் கட்டணத் திருத்த யோசனை தொடர்பில் பொதுமக்களிடம் இருந்து வாய்மொழியாக கருத்துக்களைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்று (27) ஆரம்பமாகவுள்ளது.

முதலாவது அமர்வு இன்று மத்திய மாகாணத்தில் ஆரம்பமாகவுள்ளதுடன், கண்டி மாவட்ட செயலக வளாகத்தில் இது இடம்பெறவுள்ளது.

புத்தாண்டின் முதல் 6 மாதங்களுக்கு மின் கட்டணத்தை திருத்தம் செய்யாமல் பராமரிக்க வேண்டும் என்று சமீபத்தில் மின்சார சபை முன்மொழிந்திருந்தது.

இது தொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, பதில் யோசனைகளை முன்வைத்து, ​​மின்சாரக் கட்டணத்தை 10 முதல் 20 வீதம் வரை குறைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தது.

இந்த யோசனைகள் தொடர்பில் கடந்த 17ஆம் திகதி முதல் பொது மக்களிடமிருந்து எழுத்துமூலமான கருத்துக்கள் பெறப்பட்டதுடன், இன்று முதல் ஜனவரி 10ஆம் திகதி வரை 9 மாகாணங்களையும் உள்ளடக்கி வாய்மொழி கருத்துக்களைப் பெற்றுக்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அதன்படி, மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பில் பொதுமக்கள் தமது கருத்துக்களை தெரிவிக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தொலைபேசி இலக்கமான 0772 943 193க்கு தொடர்பு கொண்டு பதிவு செய்ய முடியும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

வாய்மொழி மூலமும் எழுத்து மூலமும் கருத்துகளைப் பெற்ற பின்னர் ஜனவரி 17ஆம் திகதி தனது இறுதி அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தொடர்பாடல் பிரிவின் பணிப்பாளர்
ஜயநாத் ஹேரத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share This
NEWER POSTமாணவி மீது பாலியல் வன்கொடுமை – தன்னை தானே சாட்டையால் அடித்துக்கொண்ட அண்ணாமலை
OLDER POSTமன்மோகன் சிங் மறைவிற்கு அரசியல் பிரமுகர்கள் இரங்கல்

விளையாட்டுEXPLORE ALL

இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் லார்கின்ஸ் காலமானார்

இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் லார்கின்ஸ் காலமானார்

June 30, 2025 9:11 am
யாஷ் தயாள் என்னை ஏமாற்றவிட்டார் – பெண் பரபரப்பு புகார்

யாஷ் தயாள் என்னை ஏமாற்றவிட்டார் – பெண் பரபரப்பு புகார்

June 29, 2025 1:52 pm
பங்களாதேஸுக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட்: இலங்கை அணி அபார வெற்றி

பங்களாதேஸுக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட்: இலங்கை அணி அபார வெற்றி

June 28, 2025 11:29 am
இலங்கை – சிம்பாப்வே தொடர் – போட்டி அட்டவணை வெளியீடு

இலங்கை – சிம்பாப்வே தொடர் – போட்டி அட்டவணை வெளியீடு

June 28, 2025 10:14 am
அல் நாசர் கழகத்துடனான ஒப்பந்தத்தை 2027 வரை நீடித்தார் ரொனால்டோ

அல் நாசர் கழகத்துடனான ஒப்பந்தத்தை 2027 வரை நீடித்தார் ரொனால்டோ

June 27, 2025 11:06 am

உலகம்EXPLORE ALL

அமெரிக்காவில் பாடசாலை மாணவனின் உணவுப் பெட்டியில் துப்பாக்கி

அமெரிக்காவில் பாடசாலை மாணவனின் உணவுப் பெட்டியில் துப்பாக்கி

June 30, 2025 6:32 pm
தேசியத் தலைமை மீதான எந்தவொரு தாக்குதலும் போர்க்குற்றத்திற்குச் சமம்

தேசியத் தலைமை மீதான எந்தவொரு தாக்குதலும் போர்க்குற்றத்திற்குச் சமம்

June 30, 2025 3:47 pm
உக்ரைன் மீது மிகப்பெரிய வான்வழித் தாக்குதல்களை நடத்தியது ரஷ்யா

உக்ரைன் மீது மிகப்பெரிய வான்வழித் தாக்குதல்களை நடத்தியது ரஷ்யா

June 30, 2025 8:49 am
காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 81 பலஸ்தீனியர்கள் உயிரிழப்பு

காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 81 பலஸ்தீனியர்கள் உயிரிழப்பு

June 28, 2025 6:40 pm
பிலிப்பைன்ஸின் மின்டானோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

பிலிப்பைன்ஸின் மின்டானோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

June 28, 2025 1:53 pm
Oruvan.com
Oruvan.com முன்னணி தமிழ்ச் செய்தி இணையதளம் ஆகும். இத்தளமானது இலங்கை மற்றும் உலகம் முழுவதும் பரந்து வாழும் தமிழ் பேசும் மக்களுக்கு உண்மையான, விரிவான மற்றும் உடனுக்கு உடனான செய்திகளை வழங்குகின்றது. அனுபவமிக்க ஊடகவியலாளர்களின் பங்களிப்புடன் ஒருவன் தளத்தில் வழங்கப்படும் அரசியல், வர்த்தகம், கல்வி, சினிமா, பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு உட்பட அனைத்து வகையான செய்திகளையும் விரைவாகப் பார்வையிட முடியும்.
SEARCH SOMETHING
© 2024 Copyright Oruvan. All rights reserved.