
டித்வா புயல் ஏற்படுத்திய சேதம் – ஜனாதிபதி அனுரவுடன் அமெரிக்க சிறப்பு தூதுவர் பேச்சு
இலங்கையில் ஏற்பட்ட பேரிடரை தொடர்ந்து தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க சிறப்புத் தூதரும், வெள்ளை மாளிகையின் ஜனாதிபதி பணியாளர் அலுவலகத்தின் இயக்குநருமான செர்ஜியோ கோர், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுடன் பேசியுள்ளார்.
இன்று காலை தொலைபேசி ஊடகா ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவை தொடர்புகொண்ட செர்ஜியோ கோர், அமெரிக்கா தொடர்ந்து நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக கூறியுள்ளார்.
இதன்போது பேரிடல் காலத்தில் அமெரிக்கா அளித்த தொடர்ச்சியான ஆதரவிற்கு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க நன்றி தெரிவித்தார்.
இந்நிலையில், இலங்கை குறித்த நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக அமெரிக்க வெளியுறவுத் துறையின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரப் பணியகம் தெரிவித்துள்ளது.
அத்துடன், பேரிடரில் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாகவும்,” பணியகம் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
