
பேரிடர் நிலை – வரவு செலவுத் திட்ட விவாதம் ஒத்திவைப்பு
பேரிடர் நிலைமை காரணமாக, வரவு செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதத்தை நாளை மற்றும் சனிக்கிழமைகளில் நிறுத்தி வைக்க கட்சித் தலைவர்கள் முடிவு செய்துள்ளதாக எதிர்க்கட்சியின் தலைமை கொறடா கயந்த கருணாதிலக தெரிவித்தார்.
சில அரசாங்க அலுவல்களைக் கவனிப்பதற்காக, சபை நாளை சிறிது நேரத்திற்கு கூட்டப்படும்.
இருப்பினும், இந்த இரண்டு நாட்களை ஈடுசெய்யும் வகையில் வரவு செலவுத் திட்டம் மீதான விவாதம் டிசம்பர் முதலாம் திகதி மற்றும் டிசம்பர் இரண்டாம் திகதி நள்ளிரவு 12 மணி வரை நீட்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
