இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் இந்திய பயணம் மீண்டும் இரத்து

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீண்டும் ஒருமுறை இந்திய பயணத்தை ஒத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த வருட இறுதியில் இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க திட்டமிட்டிருந்தார்.
டெல்லியில் நடைபெற்ற குண்டு வெடிப்புக்குப் பிறகு, பாதுகாப்பு கவலை காரணமாக பயணத்தை ஒத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நெதன்யாகு கடந்த 2018 ஆம் ஆண்டு இந்தியா சென்றிருந்தார். பாதுகாப்பு மதிப்பீடு நிலுவையில் உள்ள நிலையில் அடுத்த வருட தொடக்கத்தில் வரும் வகையில் புதிய திகதியை கோருவார் என கூறப்படுகிறது.
நெதன்யாகு இந்தியா வரும் திட்டத்தை ரத்து செய்வது இது 3 ஆவது முறையாகும்.
கடந்த செப்டம்பர் 09 ஆம் திகதி இந்தியா செல்ல திட்டமிட்டிருந்த நிலையில் முன்னெப்போதும் இல்லாத வகையில் செப்டம்பர் 17 ஆம் திகதி மீண்டும் தேர்தல் நடத்தப்பட்டதால் இந்திய பயணத்தை ரத்து செய்தார்.
அதற்கு முன் கடந்த ஏப்ரல் மாதமும் தேர்தல் காரணமாக இந்திய பயணத்தை ரத்து செய்திருந்தார்.
கடந்த 2017ஆம் ஆண்டு இந்திய பிரதமர் மோடி இஸ்ரேல் சென்றிருந்தார். இஸ்ரேல் சென்ற முதல் இந்திய பிரதமர் மோடி என்பதும் குறிப்பிடத்தக்கது.
