கொலை சம்பவம் – பத்து பேருக்கு மரண தண்டனை

கொலை சம்பவமொன்று தொடர்பில் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்ட பத்து பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
எம்பிலிப்பிட்டிய மேல் நீதிமன்றம் இன்று இந்த தீர்ப்பை அளித்துள்ளது.
எம்பிலிப்பிட்டியவின் முல்லகஸ்யாய பகுதியில் 2011 ஆம் ஆண்டு ஒருவரை கொடூரமாக கொலை செய்த கொலை வழக்கே இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது சந்தேகநபர்கள் குற்றத்தில் ஈடுபட்டமை கண்டறியப்பட்ட பின்னர், மூன்று பெண்கள் உட்பட பத்து பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
