தேரர்களை அடிக்க பொலிஸாருக்கு உரிமை இல்லை – சஜித் வலியுறுத்து

திருகோணமலை விஹாரை பிரச்சினையைத் தீர்க்க நடவடிக்கை எடுக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன், புத்தசாசனத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற பொது பாதுகாப்பு அமைச்சின் செலவினத் தலைப்பு மீதான வரவு செலவுத் திட்ட குழு நிலை விவாதத்தின் போது அவர் இவ்வாறு கூறினார்.
திருகோணமலை விஹாரை பிரச்சினையைத் தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இதற்கு தனது கட்சி ஆதரவளிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் பௌத்த தேரர்களை அடிக்க பொலிஸாருக்கு உரிமை இல்லை என்று கூறிய எதிர்க்கட்சித் தலைவர், புத்த சாசனத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.
