சடுதியாக குறைவடைந்த தங்கத்தின் விலை

சடுதியாக குறைவடைந்த தங்கத்தின் விலை

இலங்கையில், தங்கத்தின் விலை இன்றைய தினம் (15) 10,000 ரூபாவால் குறைவடைந்துள்ளது.

இதற்கமைய, தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 330,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

அத்துடன் 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 305,100 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 41,250 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 38,138 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

Share This