வத்தளை பகுதியில் துப்பாக்கியுடன் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இருவர் கைது

வத்தளை பகுதியில் துப்பாக்கியுடன் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இருவர் கைது

வத்தளை பகுதியில் பிஸ்டல் ரக துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாரின் உத்தரவை மீறிச் சென்ற காரை துரத்திச் சென்ற அதிகாரிகள் அந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்த போது துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளது.

காரின் ஓட்டுநர் இருக்கைக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி மற்றம் தோட்டாக்களை பொலிஸார் கண்டுப்பிடித்துள்ளனர்.

துப்பாக்கி வைத்திருந்ததாக கைது செய்யப்பட்ட ஓட்டுநரிடம் விசாரணை நடத்தியதில், அவர் வேறொரு நபருக்குக் கொடுக்க ஆயுதத்தை எடுத்துச் சென்றது தெரியவந்தது.

அதன்படி, இரண்டாவது சந்தேக நபரும் வத்தளை பொலிஸ் பிரிவின் மாபோல பகுதியில் வைத்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட இருவரும் 33 வயதுடையவர்கள் எனவும் அவர் யாழ்ப்பாணப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மற்றும் இந்த துப்பாக்கியைப் பயன்படுத்தி அவர்கள் செய்ய திட்டமிட்டிருந்த குற்றங்கள் தொடர்பான தகவல்களைக் கண்டறிய வத்தளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Share This