கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூடு சம்பவம் – யாழ் மாவட்டத்தில் மூவர் கைது

கொழும்பு – கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணத்தில் சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் – மானிப்பாய் பகுதியில் சந்தேகநபர்கள் தலைமறைவாகியிருந்த நிலையில் இன்று (8) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவர்களில் பெண் ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு – கொட்டாஞ்சேனை பகுதியில் கார் ஒன்றில் வருகை தந்த அடையாளந் தெரியாத நபர்களால் நேற்று துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
இந்த சம்பவத்தில் குற்றவியல் குழு உறுப்பினர் பாலச்சந்திரன் புஷ்பராஜ் என்ற நபர் உயிரிழந்தார்.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
