குருக்கள்மடம் பகுதியில் விபத்துக்குள்ளான முச்சக்கர வண்டி – இளைஞர்கள் மூவர் காயம்

மட்டக்களப்பு குருக்கள்மடம் பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் இளைஞர்கள் மூவர் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மட்டக்களப்பிலிருந்து மாங்காடு நோக்கி பயணித்த முச்சக்கர வண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் காயமடைந்த 03 இளைஞர்களும் செட்டிபாளையம் பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில்,
மேலதிக சிகிச்சைக்காக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
