தொடாங்கொடையில் இடம்பெற்ற வாகன விபத்தில் பலியான இளைஞன்

தொடாங்கொடையில் இடம்பெற்ற வாகன விபத்தில் பலியான இளைஞன்

தொடாங்கொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மலபட – புஹாபுகொட வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.

மலபட சந்தியில் இருந்து புஹாபுகொடை நோக்கிப் பயணித்த ட்ரக்டர் ரக வாகனம் ஒன்று, அதற்கு எதிர்த் திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிளின் சாரதியும் பின்னால் பயணித்தவரும் காயமடைந்து நாகொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதன்போது மோட்டார் சைக்கிளில் பின்னால் பயணித்தவரே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் 29 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சடலம் நாகொடை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், தொடாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share This