போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நிதி பரிவர்தனை – கொழும்பில் இளம் பெண் கைது

வெளிநாடுகளில் உள்ள இரண்டு முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்புடைய நிதி பரிவர்த்தனைகளை நிர்வகித்ததாகக் கூறப்படும் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளது.
கொழும்பு 13 ஐச் சேர்ந்த 28 வயது பெண் ஒருவர் சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவால் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
போதைப்பொருள் கடத்தல்காரர்களின் சார்பாக பணப் பரிமாற்றங்களை எளிதாக்குவதற்காக சந்தேக நபர் உள்ளூர் தனியார் வங்கிகளில் இரண்டு வங்கிக் கணக்குகளைத் திறந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
சட்டவிரோத பணப் புழக்கம் குறித்த விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
