கொழும்பில் நாளை 10 மணிநேர நீர் வெட்டு அமுல்

கொழும்பில் நாளை(23)காலை 10.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை 10 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
கொழும்பு 01 முதல் 15 வரையிலான அனைத்துப் பகுதிகளும் மற்றும் பத்தரமுல்ல, இராஜகிரிய, நுகேகொடை, மகரகம உட்பட பல புறநகர்ப் பகுதிகளுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
மேலும் பெலவத்த, ஹோகந்தர, கொஸ்வத்த, தலவத்துக்கொட, கோட்டை, மிரிஹானை, மாதிவெல, நுகேகொடை, நாவல, கொலன்னாவை, ஐ.டி.எச், கொட்டிகாவத்தை, அங்கொடை, வெல்லம்பிட்டிய, முல்லேரியா, பொரலெஸ்கமுவ ஆகிய பகுதிகளிலும் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
கொலன்னாவ நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படும் பராமரிப்புப் பணிகள் காரணமாக நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மேலும் தெரிவித்துள்ளது.