ஹரிணி அமரசூரிய – சீன மக்கள் குடியரசின் பிரதமர் இடையே சந்திப்பு

ஹரிணி அமரசூரிய – சீன மக்கள் குடியரசின் பிரதமர் இடையே சந்திப்பு

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் சீன மக்கள் குடியரசின் அரச பேரவையின் பிரதமர் லி கியாங் இடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பு இன்று திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பின் போது வர்த்தகம் மற்றும் முதலீட்டுத் துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துதல், இலங்கையின்
கடன் மறுசீரமைப்பு மற்றும் அபிவிருத்தித் துறைகளுக்கு உதவுதல் போன்ற விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் கல்வித் துறையில் ஸ்மார்ட் வகுப்பறைகள், புலமைப்பரிசில்கள் மற்றும் அரச அதிகாரிகளுக்கான விசேட பட்டப் படிப்பு
கற்கைகள் மற்றும் பாடசாலை சீருடை துணிகளை வழங்குவது குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

மேலும் விவசாயம், சுற்றுலா, பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட பல துறைகளில் ஒத்துழைப்பு குறித்தும் இதன் போது கலந்துரையாடல்
இடம்பெற்றுள்ளது.

Share This