முட்டை விலையை 10 ரூபாவால் குறைக்க தீர்மானம்

முட்டை விலையை 10 ரூபாவால் குறைக்க அகில இலங்கை சிறு மற்றும் நடுத்தர முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
பாரியளவிலான உற்பத்தியாளர்களின் மாஃபியாவை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அந்த சங்கத்தின் தலைவர் நவோத் சம்பத் பண்டார தெரிவித்தார்.
இதன்படி, வெள்ளை முட்டை ஒன்று 18 ரூபாவாகவும், சிவப்பு நிற முட்டை ஒன்று 20 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படும் என்றும்
அவர் கூறியுள்ளார்.
எவ்வாறானியும் சந்தை பற்றிய புரிதல் இன்றி விலையைக் குறைப்பது ஆபத்தானது என அகில இலங்கை கோழி வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர எச்சரித்துள்ளார்.