ஆசியக் கிண்ணம் 2025!! கை கொடுக்க மறுத்தது முதல் காசை தூக்கி எறிந்தது வரை – விளையாட்டில் நடந்த அரசியல்

ஆசியக் கிண்ணம் கிரிக்கெட் தொடர் நடந்து முடிந்த நிலையில் இந்திய அணி இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை தோற்கடித்து வெற்றியை தனதாக்கியுள்ளது.
துபாயில் இடம்பெற்ற இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி தோற்கடித்திருந்தது.
இந்த தொடரில் இந்திய அணி எந்தவொரு போட்டியிலும் தோல்வியடையாது சம்பியன் கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது.
அதேநேரத்தில் இந்த தொடரில் இந்திய அணியை மூன்று முறை எதிர்கொண்ட பாகிஸ்தான் அணி மூன்று முறையும் தோல்வியை சந்தித்துள்ளது.
இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணியினர் 19 சதம் ஒரு ஓவர்களின் சலக விக்கெட்டுகளையும் இழந்து 146 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டனர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 19 தசம் நான்கு ஓவர்களின் ஐந்து விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 150 ஓட்டங்களை குவித்து வெற்றியை தனதாக்கிக்கொண்டது.
எவ்வாயினும், போட்டி முடிந்த பின்னர் வெற்றிபெற்ற அணிக்கு வழங்கப்படும் சம்பியன் கிண்ணத்தை ஏற்க இந்திய அணி மறுத்துள்ளது.
பாகிஸ்தானின் உள்துறை அமைச்சரும், ஆசிய கிரிக்கெட் பேரவையின் தலைவருமான மோஷின் நக்வி கையில் இருந்து ஆசியக் கிண்ணத்தை வாங்க இந்திய அணி வீரர்கள் மறுத்தனர்.
இதனால் கிண்ணம் இன்றியே இந்திய அணி தனது வெற்றியை கொண்டாடியிருந்தது. இந்நிலையில், இந்திய அணியின் பெற்றியை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.
வெற்றி பெற்ற இந்திய அணிக்கு, இந்திய அணி வீரர்களை மேடைக்கு வரவழைக்கப்பட்டனர். அவர்களுக்கு பாகிஸ்தான் உள்துறை அமைச்சரும், ஆசிய கிரிக்கெட் பேரவையின் தலைவருமான மோஹ்சின் நக்வி கோப்பை மற்றும் பதக்கங்கள் வழங்க முடிவு செய்யப்பட்டது.
ஆனால் 1 மணி நேரத்திற்கு மேலாக தாமதமாக வந்த இந்திய அணி வீரர்கள், மோஹ்சின் நக்வி கையில் இருந்து ஆசிய கோப்பையை வாங்க இந்திய அணி வீரர்கள் மறுத்துவிட்டனர்.
மாறாக அவர்கள், கோப்பையை கையில் கொண்டு வந்தது போல் சைகை காட்டி தங்களது வெற்றியை கொண்டாடினர். இதில் அதிருப்தியடைந்த பாகிஸ்தான் அமைச்சர் மோஹ்சின் நக்வி மைதானத்தை விட்டு வெளியேறினார்.
மேலும், இந்திய அணி வீரர்கள் ஆசியக் கோப்பையை பெற்றுக்கொள்ளததால் அந்த கிண்ணத்தை ஆசியக் கிண்ண நிர்வாகம் கையோடு தூக்கிச் சென்றது.
பாகிஸ்தான் அமைச்சரிடம் இருந்து இந்திய அணி வீரர்கள் கிண்ணத்தை வாங்க மறுத்ததால் கிண்ணத்தை நிர்வாகம் கையோடு தூக்கிச் சென்ற விவகாரம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையில் இரண்டாம் இடம்பிடித்த பாகிஸ்தான் அணிக்கு வழங்கப்பட்ட பணப் பரிசை அதாவது காசோலையை தூக்கி எறிந்திருந்தார். இதுவும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையில் பாரிய அரசியல் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், அதன் தாக்கத்தை இந்த தொடர் முழுவதும் காணமுடிந்தது.
இருநாட்டு வீரர்களும் தங்களின் கோபங்களை பகிரங்கமாக வெளிபப்படுத்தியிருந்தனர்.
லீக் தொடரில் இரு அணிகளும் மோதிய போது, போட்டியின் முடிவில் பாகிஸ்தான் அணி வீரர்களுக்கு இந்திய அணி வீரர்கள் கை கொடுக்க மறுத்தனர். இது பெரிய சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது.
பின்னர் இடம்பெற்ற இரண்டு போட்டிகளின் போது நாணய சுழற்சியின் போதும் இந்திய அணி தலைவர் பாக் அணி தலைவருக்கு கை கொடுக்க மறுத்திருந்தார்.
இந்திய வீரர்கள் கைகுலுக்க மறுத்தமை அனுமதித்த போட்டி நடுவர் ஆன்டி பைக்ராப்டை நீக்க வேண்டும் என சர்வதேச கிரிக்கெட் பேரவையிடம் பாகிஸ்தான் முறைப்பாடும் செய்திருந்தது.
மேலும் போட்டிகளில் போது இந்திய ரசிகர்களை சீண்டும் வகயைில் ஜெட் விமானம் தலையில் மோதியது போல் பாகிஸ்தான் வீரர் ஹரிஸ் ரவுப் சைகை காட்டியிருந்தார்.
இதை சர்வதேச கிரிக்கெட் பேரவை கண்டித்து அபராதமும் வித்திருந்தது.
மேலும், போட்டியின் போது அரைச்சதம் அடித்த பின்னர் பாகிஸ்தான் வீரர் ஃபர்ஹான, தனது துடுப்பாட்ட மட்டையை விமானம் போன்று பாவித்து சுடுவது போன்ற கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்.
இதையும் சர்தேச கிரிக்கெட் பேரவை கடுமையாக எச்சரித்திருந்தது.
இந்நிலையில், பாகிஸ்தான் அணிக்கு எதிரான வெற்றியை இந்திய பாதுகாப்பு படையினருக்கு அர்ப்பணிப்பதாக இந்திய அணித் தலைவர் சூர்யகுமார் யாதவ் பேசியிருந்தார்.
போட்டியின் போது அரசியல் பேசியமைக்காக அவருக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.
இப்பயாக இந்திய மற்றும் பாகிஸ்தான் அணி வீரர்கள் இந்த தொடர் முழுவதும் தங்களின் கோப்தை வெளிப்படையாக காட்டியிருந்தனர்.