கண்டி – கொழும்பு பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த இளைஞன்

கண்டி – கொழும்பு பிரதான வீதியின் மிரிஸ்வத்த பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கொழும்பு நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் எதிரே வந்த கனரக வாகனமொன்றுடன் மோதியுள்ளது.
இதன்போது பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் 25 வயதான இளைஞரே உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.