காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 50 பேர் பலி

தோஹாவில் ஹமாஸ் தலைவர்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதல் குறித்து உலகம் கவனம் செலுத்தியுள்ள நிலையில் காசாவில் இஸ்ரேலிய படைகள் மேற்கொண்ட தொடர் தாக்குதலால் 50 பேர் உயிரிழந்துள்ளனர்.
இடைவிடாத இந்த குண்டு தாக்குதல் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தெற்கு பகுதியில் உதவிக்காக கூடியிருந்த 09 பலஸ்தீனியர்கள் தாக்குதலில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, பலர் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள தெற்கே செல்ல முயன்றதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
காசா துறைமுகத்தில் இடம்பெயர்ந்தவர்களுக்கு இடையிலான கூடாரங்களை நோக்கி நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் இரண்டு பொதுமக்கள் உயிரிழந்ததாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.