கொழும்பு பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் கைது

கொழும்பு பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் கைது

கொழும்பு பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் உதித்த லியனகே குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால்  இன்று (25) கைது செய்யப்பட்டுள்ளார்.

ஸ்ரவஸ்திபுராவின் திபிரிகடவல பகுதியில் புதையல் தோண்டுதல் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட அவரது மனைவி மீதான விசாரணையுடன் தொடர்புடைய கைது என தெரிவிக்கப்படுகிறது.

ஸ்ரவஸ்திபுராவின் திபிரிகடவல பகுதியில் கோவிலொன்றுக்கு அருகில் அமைந்துள்ள  நிலத்தில் புதையல் தோண்டியதாகக் கூறப்படும்  உதித்த லியனகேவின் மனைவி உட்பட 08 பேரை அனுராதபுரம் பொலிஸார் அண்மையில் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை விடுவிக்குமாறு கொழும்பு பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் உதித்த லியனகே தொலைபேசி மூலம் சோதனை மேற்கொண்ட அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்த சம்பவம் குறித்தும் தகவல் அளிக்கப்பட்டது.

இந்த உண்மைகளை வெளிக்கொணரும் வகையில், அனைத்து தொலைபேசி நிறுவனங்களும் சந்தேக நபர்களின் தொலைபேசி எண்கள் தொடர்பான பகுப்பாய்வு அறிக்கைகளை உடனடியாக பொலிஸாருக்கு வழங்க வேண்டும் என அனுராதபுரம் பதில் நீதவான் சந்தன வீரக்கோன் முன்னர் உத்தரவிட்டிருந்தார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )