காட்டு யானை தாக்குதலுக்கு இலக்கான ஒருவர் பலி

காட்டு யானை தாக்குதலுக்கு இலக்கான ஒருவர் பலி

அம்பன்பொல பகுதியில் காட்டு யானை தாக்குதலுக்கு இலக்கான ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தனது காணிக்குள் நுழைந்த காட்டு யானையை விரட்ட முயன்றபோது, அவர் காட்டு யானையால் தாக்கப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த நபர் காட்டு யானைத் தாக்குதலுக்குப் பின்னர் பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

உயிரிழந்தவர் அம்பன்பொல பகுதியைச் சேர்ந்த 53 வயதானவர் என தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )